பயங்கரவாத குழுக்கள் தொடர்பான விசாரணை மந்த கதியில்: நாமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

வன்முறை சம்பவங்களின் பொறுப்பை எதிர்க்கட்சியின் மேல் சுமத்தி விட்டு, அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மீது சுமத்தி அரசாங்கம் நாடகம் ஒன்றை ஆடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போது ஈஸ்டர் தாக்குதலை நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளை மறந்து விட்டு, அரசாங்கம் எதிர்க்கட்சியினரை துரத்துகிறது.

அரசாங்கம் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் தள்ளியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ராஜபக்ச அரசாங்கம் கையளித்த அமைதியான நாட்டை பாதாளத்திற்குள் தள்ளியுள்ளது.

முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றி விசாரணை நடத்தாது, வேறு நபர்களை சிக்க வைக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றோம்.

அரசாங்கம் பயங்கரவாத குழுக்கள் தொடர்பான விசாரணைகளை மந்த கதியில் மேற்கொண்டு வருகிறது.

ஊடக தணிக்கை காரணமாக அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கூறும் விசாரணைகள் மீதும் மக்கள் சந்தேகமும் அச்சமும் கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.