வன்முறை தாக்குதல்களின் பின்னால் எதிர்க்கட்சியின் சக்தி

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் நடந்த வன்முறை தாக்குதலின் பின்னணியில் எதிர்க்கட்சியின் அரசியல் சக்தி இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில், சில எதிர்க்கட்சி அரசியல் அணிகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிப்பது கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமையை துரிதமாக முடிவுக்கு கொண்டு வந்து, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த கட்சி, இன, மத பேதமின்றி அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைய வேண்டும்.

வெசாக் பௌர்ணமி தினத்தின் பின்னர், மக்கள் வழமைப் போல் தமது கடமைகளை செய்ய முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை கூடிய விரைவில் வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் ராஜாங்க அமைச்சர் அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்.