இலங்கையின் முன்னணி வர்த்தகரை இரகசியமாக சந்தித்த ரணில் - பேசியது என்ன?

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரகசியமான முறையில் இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரவை, அவரது வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உத்தியோகப்பூர்வ வாகனத்தை தவிர்த்து விட்டு ரணில் விக்ரமசிங்க, தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு சென்றதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் இந்த சந்திப்பில், தற்போதைய அரசியல் நிலைமைகள், பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் இறுதியாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தம்மிக்க பெரேராவிடம் யோசனை முன்வைத்துள்ளார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பாக நாட்டின் பெரும்பாலான மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வெளியில் இருந்து புதிய முகம் வர வேண்டும் என பலர் எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தகுதியான நபர் தம்மிக பெரேரா எனவும் தம்மிக்க பெரேரா ஜனாதிபதியாகவும் தான் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

தம்மிக்க பெரேரா இதற்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

தம்மிக்க பெரேரா அரசியலில் ஈடுபட நீண்டகாலமாக எதிர்ப்பார்பில் இருந்து வருகிறார்.

இதன் அடிப்படையிலேயே பிரதமர், அவரை பொது வேட்பாளராக போட்டியிடும் யோசனையை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள தம்மிக பெரேரா,

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இருக்காது. அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற முடியும்.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், பிரசார முகாமையாளராக ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவை நியமிப்பேன்.

அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவும் எனக்கு கிடைக்கும். அப்படி நடந்தால், ஜனாதிபதி கௌரவமாக விடை செல்ல வழிவகுப்பேன்.

ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதரவை பெற்றுக்கொள்வதிலும் பிரச்சினையில் அவர்கள் எனக்கு எதிராக செயற்பட முடியாது. தனியார் ஊடகங்களும் என்னுடன் இருக்கின்றன. அப்படி பார்த்தால் அனைவரும் என்னுடன் இருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், மைத்திரிபால சிறிசேன அதனை எதிர்க்கலாம். மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் கட்டாயம் ஆதரவளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஈட்டிய பணத்தை தமிக்க பெரேராவின் நிறுவனங்களிலேயே முதலீடு செய்துள்ளனர். இதனால், தம்மிக்க பெரேராவை எதிர்ப்பது ராஜபக்ச குடும்பத்தினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இலங்கை அரசியலில் ரணில் விக்ரமசிங்க என்ற அரசியல்வாதி, பாடுபடாமல் அறுவடை செய்யும் முயற்சிக்கும் நபர் என அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தினார். 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தினார். தற்போது 2020 ஆம் ஆண்டு தம்மிக்க பெரேராவை அவர் தெரிவு செய்துள்ளார்.

தம்மிக்க பெரேராவுக்கும் பிரதமருக்கும் இடையிலான மேற்படி சந்திப்பை இலங்கை பிரபலமான மாநாயக்க தேரர் ஒருவர் ஏற்பாடு செய்துக்கொடுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தம்மிக்க பெரேரா, ரணில் விக்ரமசிங்கவின் யோசனை ஏற்றுக்கொண்டுள்ளதாக பேசப்படுகிறது. இதற்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் 2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டு விட்டதாக அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.