நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் - கோத்தபாய ராஜபக்ச

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் நிச்சயமாக போட்டியிடப் போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே தாம் தீர்மானித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையென்றால் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து கொள்ள வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.