ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்...!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

புணானையில் அமைக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தின் தலைவராக அவரின் புதல்வர் ஹிராஷ் ஹிஸ்புல்லாவே செயற்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா புணானையில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தினை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற கண்காணிப்பு குழு அண்மையில் சென்றிருந்தது. இதன்போது பல்கலைகக்கழகத்தின் முக்கிய விடையங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

இந்நிலையில் இது தொடர்பில் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் புதல்வரான ஹிராஷ் ஹிஸ்புல்லாவே மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவராக செயற்படுகின்றார்.

பாராளுமன்ற கண்காணிப்பு குழுவினர் இந்த பல்கலைகழகத்தின் தற்போதைய தலைவர் ஹிராஷ் ஹிஷ்புல்லாவிடம் தொடர்ந்து பெற்றுக் கொண்ட விசாரணைகளை முன்னெடுத்தது. கிடைக்கப் பெற்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட முழுமையான அறிக்கை ஜீலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

பேராசிரியர் ரங்திவெல தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் பல்கலைக்கழகம் தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கையில் ஷரியா பல்கலைகழத்திற்கான ஹிரா மன்றம் என்ற பெயரிலே பதிவு செய்வதற்கான விண்ணப்படிவம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . இதன் பின்னரே இந்த பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வறான பல விடயங்கள் பாராளுமன்ற கண்காணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் நேரடிய கண்காணிப்பில் செயற்படுகின்ற ஒரு தனியார் பல்கலைக்கழகமாக தொழிற்பட வேண்டும். அத்துடன் இந்த பல்கலைக்கழகம் தொழினுட்ப பல்கலைக்கழகமாக முழுமையாக செயற்படுதல் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.