இராணுவத் தளபதியின் கருத்துக்கு மாலைதீவு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது?

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் கருத்துக்கு மாலைதீவு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை ஊடாக மாலைதீவு பிரஜைகள் சிரியா நோக்கிப் பயணிப்பதாக இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க அண்மையில் கருத்து வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்த கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு மாலைதீவு அரசாங்கம் கோரியுள்ளது.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் மியுவான் மொஹமட் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளமை குறித்து மாலைதீவு கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதியின் கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் மூலம் இலங்கை வாழ் மாலைதீவு பிரஜைகளுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத் தளபதியின் கருத்து மாலைதீவு குறித்து சந்தேகங்களையும் குரோதத்தையும் உருவாக்கக் கூடியது என்பதனால் இது குறித்து விளக்கம் அளிக்க்பபட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் எந்தவொரு மாலைதீவு பிரஜைக்கும் தொடர்பு உண்டு என்பது இதுவரையில் நிரூபணமாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வாழ் மாலைதீவு பிரஜைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.