பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதி தலைவரை கைது செய்ய நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

மினுவாங்கொடையில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதி தலைவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மினுவாங்கொடை நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

அதில், பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதி தலைவர் மதுமாதவ அரவிந்த வன்முறை வேளையில் தமது வாகனத்துடன் அந்த இடங்களில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரையும் அவருடைய 10 சகாக்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.