அடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! நிதியமைச்சர் அறிவிப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

ஸ்வீட் ஹோம் என்ற புதிய வீடமைப்பு கடன் திட்டம் அடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கிகளுக்கென தெரிவு செய்யப்பட்ட 304 பயிலுநர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் அவரது அமைச்சில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

புதிதாக திருமணமான இளம் தம்பதியினருக்கு வீடொன்றை பெற்றுக் கொள்வதற்காக ஸ்வீட் ஹோம் வீடமைப்பு கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் குறித்த புதிய கடன் திட்டமானது அடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது 6.75 சதவீத வட்டிக்கு ஆக கூடிய தொகையாக 10 மில்லியன் ரூபாவை கடனாக பெற்று கொள்ள முடியும் என்பதுடன், இதனை இளம் தம்பதியினர் 25 வருடங்களில் திருப்பி செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.