உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவு குழு நியமனம்

Report Print Kamel Kamel in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த தெரிவு குழு தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி, நாடாளுமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க தலைமையிலான ஏழு பேரை கொண்டதாக இந்த தெரிவு குழு அமைந்துள்ளது.

மேலும், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா, ஆசு மாரசிங்க, காவிந்த ஜயவர்தன, ஜயம்பதி விக்ரமரட்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.