ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு சரியானது

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி தனது பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வது தொடர்பாக எந்த பிரச்சினைகளும் இல்லை என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அண்மையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்று இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கவில்லை.

எனினும் தனது பதவி காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிய ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு சரியானது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.