மூன்று மணிக்கு வெளியில் வரும் ஞானசார தேரர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் விடுதலையாகி வெளியில் வருவார் என குறித்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வித்தாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் இன்று காலை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிற்கு கிடைத்துள்ளது.

குறித்த கடிதத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று விடுதலை கிடைக்கும் என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

பொது பல சேனாவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வித்தாரந்தெனியே நந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஞனாசார தேரருக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து நிறைவு செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.