ரிசாட் தொடர்பான விசாரணையில் சுதந்திரக்கட்சி பங்கேற்காது - மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு பிரச்சினைக்கு தீர்வுகாண நியமிக்கப்பட்டதல்ல. பிரச்சினை மூடி மறைக்கும் முயற்சி என்பதை காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 உறுப்பினர்களில் எவரும் இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகளில் கலந்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.