ஞானசார தேரரை விடுதலை செய்யும் உத்தரவு கிடைக்கப் பெற்றது: சிறைச்சாலை ஆணையாளர்

Report Print Kamel Kamel in அரசியல்

ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நயாகம் டபிள்யூ.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான உத்தரவு தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.