ஞானசார தேரர் விடுதலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்

Report Print Kamel Kamel in அரசியல்

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஞானசார தேரரை விடுதலை செய்தமையின் ஊடாக ஜனாதிபதி அரசியல் சாசனத்தினை துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரர் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது அதிகார துஸ்பிரயோகமான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.