பாஜகவின் வெற்றிச் செய்தியை கேட்டு சம்பவ இடத்திலேயே உயிரைவிட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரு வெற்றியைப் பெற்று சாதித்துள்ளது. இதனையடுத்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது அக்கட்சி.

இந்நிலையில், இன்றைய தினம் வாக்கு எண்ணும் போது, மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தொடா்ந்து முன்னிலை வகித்து வந்த செய்தி உடனுக்குடன் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், இந்தச் செய்தியை கேட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவா் ரத்தன் சிங் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 18ஆம் திகதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தது. 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் போபாலின், சிஹோா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரான ரத்தன் சிங் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றிருந்தார்.

பாஜக தொடா்ந்து முன்னிலை வகித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இதனை கேட்ட ரத்தன் சிங் அதிா்ச்சியடைந்து கீழே அமா்ந்தாா். பின்னா் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அருகில் இருந்தவா்களிடம் தொிவித்துள்ளாா்.

அதனைத் தொடா்ந்து ரத்தன் சிங்கை அவா்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், ரத்தன் சிங் ஏற்கனவே உயிாிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஷ

மூத்த தலைவர்களின் ஒருவரான ரத்தன் சிங்கின் மரணம் அக்கட்சியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.