பயங்கரவாதத்தைதான் தோற்கடித்த நினைத்தோம், தமிழர்களை அல்ல! அமைச்சர் நவீன்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பயங்கரவாதத்தை தோற்கடிக்க நினைத்தோமே தவிர தமிழ் மக்களை தோற்கடிக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை என்று அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இப்போது முஸ்லிம் சமூகத்தின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முயற்சிகின்றோம். அதுமட்டும் அல்ல இப்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அவருக்கு எதிராக முதலில் போர்க்கொடி தூக்கும் நபர் நானே.

பயங்கரவாத தாக்குதலை எண்ணி நான் ஒருபோதும் சிரிக்கவில்லை. நான் வேறு ஒரு காரணிக்காக சிரித்ததை தவறாக சித்தரிக்க ஊடகங்கள் முயற்சிக்கின்றது.

இதேவேளை, பயங்கரவாதத்தை தோற்கடிக்க நினைத்தோமே தவிர தமிழ் மக்களை தோற்கடிக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை என்றார்.