எங்கள் பக்கம் வருகிறீர்களா? இரவில் ரிஷாத்துக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கும் மகிந்த!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இரவில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ரிஷாத்துக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தமது பக்கம் வருகிறீர்களா என்றும், வந்தால் உங்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் எனவும் கூறுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

எதிர்க்கட்சியினர் பகலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்றனர்.

இரவில் எதிர்க்கட்சி தலைவர் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தமது பக்கம் வருகிறீர்களா என்றும், வந்தால் உங்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் என்றும் கூறுகின்றார்.

உண்மையில் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது உண்மையென்றால் ஏன் அதில் எதிர்க்கட்சி தலைவர் கையொப்பமிடவில்லை. எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது.

முஸ்லிம் மக்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் நாம் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்க மாட்டோம். அதேபோல் நல்லவர்களை தண்டிக்க இடமளிக்கவும் மாட்டோம். இன்று ஏற்பட்டுள்ள பயங்கரவாத நகர்வுகளுக்கு அங்கீகாரம் கொடுத்தது முன்னைய ஆட்சியாளர்களே என்றார்.