தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் 4000 பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது உண்மையா? சபாநாயகர் வெளியிட்டுள்ள தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

4000 பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 4,000 சிங்கள பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டதாகவும், இதனை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் வைத்தியர் ஒருவர் இதனை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது தொடர்பாக பேசியுள்ள சபாநாயகர், 4,000 சிங்கள பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் எந்த உண்மையில்லை. குற்றப்புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி, பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் பேசி இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றத்திலும் ஜேவிபி இந்த விடயத்தை சுட்டிக்காட்டி, விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இது பொய்யானது என்பது தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி, பதில் பொலிஸ்மா அதிபர்ஆகியோருடன் பேசி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.