புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை எதிர்க்கும் சஜித்! ரணில் போடும் திட்டம்

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றம் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இவ்வாரம் நடைபெறவுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சர்வதேச தரத்திலான புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தை சபையில் நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது.

எனினும், அதற்கு எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் அவசியமில்லை என்றும் நடைமுறையிலுள்ள சட்டமே போதுமானது என்றும் ஐ.தே.கவின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித்தின் இந்த அறிவிப்பானது தெற்கு அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து, விளக்கமளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.