சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக்கின் செயலை அம்பலப்படுத்தும் ஞானசார தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

இஸ்லாமிய வஹாபிச அடிப்படைவாதம் சம்பந்தமாக தான் முன்கூட்டியே அதிகாரிகளுக்கு அறிவித்தமை சம்பந்தமான ஆவணங்களை அடுத்த வாரம் நாட்டுக்கு முன்வைக்க போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக், தகவல் வழங்கும் போர்வையில் பாதுகாப்பு தரப்பினரை தவறாக வழிநடத்தியுள்ளார்.

மிக விரைவில் அவர் கைது செய்யப்பட வேண்டும். வஹாப்வாதிகள் பற்றி நான் நாட்டுக்கு கூறும் முன் முன்னாள் அமைச்சர் அலவி மௌலான 2007ஆம் ஆண்டு அது குறித்த தகவல்களை வெளியிட்டார்.

எனினும் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. சலஃப்பிசம், வஹாபிசத்தை விட பயங்கரமானது. சலஃப் மற்றும் வஹாபிசம் காரணமாக முஸ்லிம் சமூகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது.

எங்களை இவற்றில் இருந்து காப்பாற்றினால், நீங்கள் புத்தராவீர்கள் என்று முஸ்லிம் மக்கள் கூறினர். முஸ்லிம் மக்கள் இது பற்றி பேச அஞ்சுகின்றனர். எதிர்த்தால், இந்த அடிப்படைவாதிகள் முஸ்லிம்களை தாக்குவார்கள். முஸ்லிம்களை இந்த அடிப்படைவாதிகள் கொன்றுள்ளனர்.

ஹலால் மூலமே இந்த பிரச்சினை ஆரம்பித்தது. 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சஹ்ரான் என்ற இளைஞன் வஹாபிசத்தை முழு கிழக்கிலும் பரப்பி, சூபி முஸ்லிம்களின் கல்லறைகளை உடைத்து, ஆயுதங்களை கையில் எடுத்து மோதல்களில் ஈடுபடுவதாக நான் கூறினேன்.

சிப்லி பாருக், அப்துல் ரஹ்மான் நல்லாட்சிக்கான முன்னணியை உருவாக்கி விட்டு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல போகிறார்கள் என்று நாங்கள் கூறினோம். என்னிடம் ஆவணங்கள் இருக்கின்றன. இதனை நான் கூறும் முன்னர் அலவி மௌலான கூறியிருந்தார்.

நான் சிறையில் இருந்த வாழ்க்கையானது பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பை படித்ததை போன்றது. எவருடைய விமர்சனமும் என்னை பாதிக்காது. எனது தலைவர் புத்த பகவான். உலகில் அவதூறுகளை எதிர்நோக்காதவர்கள் எவரும் இல்லை என்று புத்த பகவான் போதித்துள்ளார்.

ஜனாதிபதி வந்து என்னை சந்தித்தார். எந்த தயக்கமும் இன்றி ஜனாதிபதி கௌரவத்தை வழங்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers