இனவாத பரப்புரை செய்த தொலைக்காட்சிகளுக்கு விளம்பரங்களை நிறுத்திய நிறுவனங்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை தூண்டும் வகையில் அண்மைய காலத்தில் செய்திகளை வெளியிட்ட சில தொலைக்காட்சி ஊடகங்களுக்கு விளம்பரங்களை வழங்குவதில்லை இலங்கையில் இயங்கும் பிரதான தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதனால், குறித்த தொலைக்காட்சிகளின் பிரதானிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடமாற்றம் அல்லது பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கே இதனால், அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரங்கள் நிறுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக சிறிது காலம் தமது ஊழியர்களை மாற்ற போவதாக அறிவிக்க பிரதானி தயாராகி வருவதாகவும் பேசப்படுகிறது.

இனவாதம் மற்றும் அடிப்படைவாதங்களை தூண்டும் வகையில் பரப்புரை செய்யும் தொலைக்காட்சிகள் மற்றும் ஏனைய ஊடகங்களுக்கு விளம்பரங்கள் வழங்கப்பட மாட்டாது என நிதியமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

தமக்கு தெரியாமல் ஊழியர்களுக்கு அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியுள்ளதாகவும் அதற்காக மன்னிப்பு வழங்குமாறும் தொலைக்காட்சி நிறுவனங்களின் உயர் மட்ட முகாமைத்துவங்கள், விளம்பரங்களை நிறுத்தியுள்ள நிறுவனங்களிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers