ஞானசார தேரர் விடுதலை! ஜனாதிபதியின் மனிதாபிமானத்தை எடுத்து காட்டுவதாக கூறும் இராதாகிருஷ்ணன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

ஞானசார தேரர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டது சரியா, பிழையா என்பதை விட இது ஜனாதிபதியுடைய மனிதாபிமானத்தை எடுத்து காட்டுகின்றது என அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து ஞானசார தேரரின் விடுதலை தொடர்பாக ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. இதன்போது ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அவருடைய விடுதலை சரியா, பிழையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க தமிழ் அரசியல் கைதிகளும் இதேபோல பொது மன்னிப்பின் கீழ் விரைவில் விடுதலை

செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும்.

அண்மையில் வவுணதீவில் வாலிபர் விடுதலை செய்யப்பட்டமையானது ஜனாதிபதி அவர் மீது கொண்டிருந்த அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது.

அவர் விடுதலை பெற்று வந்த பின்பு தான் அனுபவித்த துன்பங்களையும் இந்த காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தின் நிலைமை பின்னடைவை சந்தித்திருப்பதையும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதையும் ஊடகங்கள் மூலமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலை இன்று தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.