அப்பாவிகளை விடுவிக்குமாறு ஜனாதியிடம் வலியுறுத்தல்

Report Print Gokulan Gokulan in அரசியல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கு சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதோடு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவிடம் தொலைபேசி ஊடாக பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இன்று, அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இனவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதன்போது வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன், எம்.எச்.ஏ. ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹிர் மெளலானா, எம்.எஸ். அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பெளசி, எம்.எஸ்.தெளபீக், எம்.ஐ.எம். மன்சூர், காதர் மஸ்தான், எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers