மோடியை தொலைபேசி வழியாக தொடர்புகொண்ட மகிந்த

Report Print Jeslin Jeslin in அரசியல்

இந்தியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நரேந்திர மோடியினை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தொலைபேசியூடாக தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் தளத்தில் இது பதிவிடப்பட்டுள்ளது.

பிரதமாராக தெரிவு செய்யப்பட்டமைக்கு நரேந்திர மோடிக்கு மகிந்த ராஜபக்ச இதன்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கு சாதகமான விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.