சிறிய கட்சிகளுக்கு இரகசிய கடிதத்தை அனுப்பிய அமைச்சர் றிசார்ட்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட ரகசிய கடிதம் ஒன்றை, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிகும் முன்னர், இந்த இரகசிய கடிதத்தை வாசித்து பார்க்குமாறு றிசார்ட் பதியூதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பௌத்த தம்ம பதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த கடிதம் கூட்டு எதிர்க்கட்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

15 பக்கங்களை கொண்ட இந்த கடிதத்தில் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளதுடன் கூட்டு எதிர்க்கட்சிக்கும், மகிந்த ராஜபக்ச கடந்த அரசாங்கம் மற்றும் சில ஊடகங்களை கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அத்துடன் தெரிவுக்குழுவில் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்ப்பை வழங்குமாறும் றிசார்ட் இந்த ரகசிய கடிதம் மூலம் சிறிய கட்சிகளின் தலைவர்களிடம் கோரியுள்ளார்.