தேச பற்றுள்ள மக்கள் சக்தியை உருவாக்கும் பொதுபல சேனா

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், நாட்டையும் நாட்டு மக்களையும் மீண்டும் கட்டியெழுப்ப, கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில், பலமான தேச பற்றுள்ள மக்கள் சக்தியை உருவாக்க போவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞானசார தேரர் சிறையில் இருந்து விடுதலையானதும் அவரை தமது பக்கம் இழுக்க, பல்வேறு அணிகள் மட்டுமல்ல, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் தேரருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ஞானசார தேரர் அவை அனைத்தையும் நிராகரித்து விட்டமாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் வித்தாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு குழுக்களுடன் எந்த தொடர்புகளை வைத்துக்கொள்ளவில்லை. அவர் எந்த சிறப்புரிமைகளையும் எதிர்பார்க்கவில்லை எனவும் நந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.