சீனா - இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை: அமெரிக்கா ராஜதந்திர எதிர்ப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை அரசாங்கம், சீனாவிடம் இருந்து தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதி நவீன தொழிற்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பாக அமெரிக்கா தனது ராஜதந்திர எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, நாட்டின் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்திடம் இருந்து அதிநவீன உபகரணங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பான பாதுகாப்பு உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டார்.

இதனையடுத்தே அமெரிக்காவின் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதி நவீன உபகரணங்கள் தேவை என்றால், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், கைச்சாத்திடப்பட்டுள்ள சோபா உடன்படிக்கையின் கீழ் அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளார்.