ஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள்! நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை

Report Print Murali Murali in அரசியல்

கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் 8 பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்த தகவலை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க முன்வைத்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ்வை பொறுத்தவரை அவர், கிழக்கில் ஹிஸ்புல்லாஹ் வலயம் ஒன்றை அமைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

எனவே இந்த பாடசாலை நிர்மாணங்கள் தொடர்பில் விரைவில் நாடாளுமன்றத்தில் பிரேரணைக்கொண்டு வந்து குறித்த பாடசாலை நிர்மாணங்களுக்கான நிதிகளை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers