முக்கிய வாய்ப்பொன்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர்

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையிலுள்ள ஊடகங்களுக்கு முக்கிய வாய்ப்பொன்றை சபாநாயகரின் அனுமதியுடன் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவு குழுவின் கூட்டங்கள் தொடர்பான செய்திகளை பெறும் வகையிலான வாய்ப்பே இவ்வாறு வழங்கப்படவுள்ளது.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரை சந்தித்த போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்படி நடவடிக்கை தொடர்பில் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், குறித்த நாடாளுமன்ற தெரிவு குழுவின் குறுக்கு விசாரணைகளை கேட்டல் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படும் பதில்களை முழுமையாக சேகரித்தல் என்பதற்கான அனுமதி வழங்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers