எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! புகைப்படத்துடன் பல தகவல்களை கூறும் ஞானசார தேரர்

Report Print Sujitha Sri in அரசியல்

தற்கொலைக்குண்டுதாரிகள் யாரைப் போன்று வேண்டுமானாலும் வரலாம் என்ற அச்சம் காணப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், இதன்போது புகைப்படமொன்றை காட்டிய ஞானசார தேரர், இந்த புகைப்படத்தில் சேக் போன்று இருக்கும் இவர் பிக்குவாகவும் இருக்கிறார்.

அப்துல் ரஹ்மான் துஷார என்ற பெயரில் பேஸ்புக்கில் கணக்கொன்றை வைத்துள்ளார். இவர் இங்கு ஒரு பெயரிலும் சவூதி அரேபியாவில் வேறு பெயரிலும் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.