சர்ச்சைக்குரிய மகப்பேற்று வைத்தியர் தொடர்பான இடைக்கால அறிக்கை தயாரானது..!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாபி தொடர்பில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலான விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் சாபி தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தற்போது வரை கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சரினால் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஆணைக்குழு தனது விசாரணையில் பலரை ஈடுபடுத்தியதோடு அது தொடர்பான அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், அவ்வறிக்கை இன்று சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் அனில் சமரனாயக்க தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழு கடந்த இரு தினங்களாக விசாரணைகளை மேற்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

குழு தற்போது வரை பல தரப்பினரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக சுகாதார ​சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.