மகிந்தவை பின்னுக்குத் தள்ளி முன்னேறிச் சென்ற மைத்திரி!

Report Print Steephen Steephen in அரசியல்

விமானங்களை நிரப்பிக்கொண்டு மக்கள் பணத்தை வீண் விரயமாக்கி, வெளிநாடுகளுக்கு செல்வதாக நாங்கள் மகிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தினோம். ஆனால், மைத்திரிபால சிறிசேன, அனைத்து வேலைகளிலும் மகிந்த ராஜபக்ச தோற்கடித்து முந்தியுள்ளார் என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மாதுளுவாவே சோபித தேரரின் 77வது ஜனன தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பங்களிப்பு வழங்கிய தவறுக்கும், சட்டத்தை மதிக்கும் பிரஜைகள் ரணில் விக்ரமசிங்கவிடம் எதிர்பார்த்த நல்லாட்சி சீர்குலைக்கப்பட்ட தவறுக்கும் தமக்கு சாபம் கிடைக்கட்டும்.

ஊழலற்றவர், இனவாதமற்றவர், அனுபவமுள்ளவர், நேர்மையான நபர் என மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதற்கான காரணங்களாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எமக்கு கூறினார். எனினும் அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்பதை நாடு தற்போது அறிந்துக்கொண்டுள்ளது.

விமானங்களை நிரப்பிக்கொண்டு மக்கள் பணத்தை வீண் விரயமாக்கி, வெளிநாடுகளுக்கு செல்வதாக நாங்கள் மகிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தினோம். ஆனால், மைத்திரிபால சிறிசேன, அனைத்து வேலைகளிலும் மகிந்த ராஜபக்ச தோற்கடித்து முந்தியுள்ளார் என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அழுத்தங்களை கொடுத்ததால், அரசியலமைப்பு பேரவையின் தேவை ஏற்பட்டது. தனக்கு தேவையான வகையில் நீதிபதிகளை நியமிக்க முடியாத காரணத்தினால, சிறிசேன, அரசியலமைப்பு பேரவையை அப்பன் பெயர் தெரியாத பிள்ளை என அவமதித்தார்.

சிறிசேன தனது அனைத்து நடவடிக்கைகளிலும் நிறைவேற்று அதிகாரத்தில் தலைகொழுத்த தனத்தை காட்டினார். மக்கள் ஒரு நபர் மீது நம்பிக்கை வைத்து ஆட்சிக்கு கொண்டு வந்தாலும் ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த ஆட்சியாளர் தனது பிள்ளை மற்றும் பரம்பரை செல்வந்தர்களாக வழியை உருவாக்கிக்கொள்கின்றனர்.

தனது பிள்ளைகளுக்கு முக்கிய நபர்களுக்கு வழங்கும் பாதுகாப்பை வழங்குவது எந்தளவுக்கு கேலிக்குரியது?. தந்தை ஜனாதிபதியாக இருப்பதால், பிள்ளைகள் செல்வந்தர்களாக மாற முடியுமா?. நாம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பேராசிரியர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.