விடுதலைப் புலிகளின் கைகளில் இந்தியா, இலங்கையின் பாதுகாப்பு? உலகிற்கே தேவையான தீவு இன்று...

Report Print Thileepan Thileepan in அரசியல்

விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மட்டுமே இலங்கை பாதுகாப்பாக இருந்ததாகவும், இந்தியாவின் பாதுகாப்பு கூட அவர்களின் கைகளிலேயே தங்கி இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இலங்கையின் அரசியல் நிலமை என்பது மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரு தேர்தலை கூட இவர்களால் இலகுவாக நடந்த முடியுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதம் ஊடுருவியுள்ள நாட்டில் எப்படி இந்த தேர்தலை சுமூகமாக நடத்த முடியும். இந்த அரசு மட்டுமல்ல நாடே சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மாத்திரமே இலங்கை பாதுகாப்பாக இருந்தது. தேர்தல்கள் நடந்தன. எந்த அப்பாவி மக்கள் மீதும் அவர்கள் கை வைக்கவில்லை.

அவர்கள் தங்களுக்கு எதிரான படையினருக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இப்படி 400 பேரை பாதிக்கும் அளவுக்கு புலிகள் செயற்படவில்லை.

இலங்கை மட்டுமன்றி இந்தியாவின் பாதுகாப்பு கூட விடுதலைப் புலிகளின் கையிலேயே தங்கியிருந்தது. இதனை இந்தியாவும் சிந்திக்கும் காலம் வந்துவிட்டது.

இன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் நிலை உருவாகியிருக்கிறது.

இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே இலங்கை தீவு அவசியமான ஒரு தீவு. ஆனால் அதனை இன்று உருக்குலைத்து விட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.