தொடரும் ஆபத்தான நிலைமை! கூட்டு எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் ஆபத்தான நிலைமை தொடர்வதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் தலைவர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று விசாரணைக்கு வரவில்லை. இது உண்மையில், தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டதா?. தெரிவுக்குழுவின் ஊடாக றிசார்ட் பதியூதீனை நிரபராதியாக்குவார்கள் என்று நாங்கள் ஆரம்பித்திலேயே கூறினோம்.

பாரதூரமான விடயம் ஒன்றை விசாரிக்க நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளாதது ஆச்சரியமானது. புலனாய்வு பிரிவினர் பலவீனப்படுத்தப்பட்டனர் என எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் பல வருடங்களாக கூறி வருகின்றோம்.

இது சம்பந்தமான தகவல்களை சேரிக்கும் புலனாய்வு பிரிவினர் மீது நம்பிக்கை வைக்காது, அந்த தகவல்களை கவனத்தில் எடுக்கவில்லை என்பதால், இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது தெளிவு. புலனாய்வு பிரிவினரிடம் விசாரணை நடத்த சரத் பொன்சேகாவை தவிர ஏனையோர் தகுதியானவர்கள் என நினைவில்லை.

இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகள் புலனாய்வு மற்றுமொரு வேலைத்திட்டமான எனவும் எண்ண தோன்றுகிறது. இதனால், புலனாய்வுப் பிரிவின் உள்விவகாரங்கள் குறித்து கேள்வி கேட்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் அதிகாரம் என்ன என்பதை அறிய மக்கள் முயற்சிக்கவில்லை.

விசாரணைகளின் போது மக்கள் விடுதலை முன்னணியும் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது எமக்கு கேள்வியை எழுப்புகிறது. புலனாய்வு தகவல்கள் எப்படி திரப்படுகின்றன என்ற தகவலை அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன இல்லாத நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் அது தொடர்பான கேள்வியை கேட்டார். ராஜித சேனாரத்ன உட்பட அரசாங்கமும், மக்கள் விடுதலை முன்னணியும் ஒரே காரணத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் இல்லை என புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி கூறுகிறார். அப்படி என்றால் யாருக்கு அதிகாரம் இருக்கின்றது?. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பெப்ரவரி மாதத்தின் பின்னர் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டப்படவில்லை என்பது நாட்டின் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம் என்பதை காட்டியுள்ளது. இதன் பிரதிபலனை நாம் பார்த்தோம்.

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் ஆபத்து தொடர்ந்தும் இருக்கின்றது என்பதை தெரிவுக்குழுவின் சாட்சியத்தின் மூலம் நாம் கண்டோம் எனவும் ஷேயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.