விசாரணைகளுக்கு ஒத்துழைத்து அமைச்சர் ரிஷாத் பதவி விலகவேண்டும்!

Report Print Murali Murali in அரசியல்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை செய்வதற்கு இடமளிக்கும் வகையில், தனது அமைச்சு பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டது.

இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்துவதில் பயனில்லை. இந்நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினருமே விசாரணை செய்ய வேண்டும்.

நாடாளுமன்றில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில், மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையையே முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இதேவேளை, தமது பதவியைக்கொண்டு முஸ்லிம்களை பாதுகாக்கமுடியும் என்று அசாத் சாலி கூறுவாராக இருந்தால் அது ஏற்புடையது அல்ல. அவர் ஜனாதிபதியினால் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே இந்த அரசியல்வாதிகள் தமது வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். ஊடகங்களுக்கு தமது சாணக்கியத்தை காட்ட முயலக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers