மோடியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இலங்கையா? அதன் பின்னணி என்ன?

Report Print Kamel Kamel in அரசியல்

இரண்டாம் இணைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜுன் மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றிவாகை சூடியது.

இந்நிலையில், பிரதம அமைச்சரும், புதிய அமைச்சரவையும் நேற்று பதவியேற்றுள்ளது.

தனது இரண்டாவது பதவிகாலத்தில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் வெளிநாட்டு பயணமாக மாலைதீவு செல்கின்றார் பிரதமர் மோடி. அங்கிருந்தே கொழும்பு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கோலோச்சியுள்ளதாக கூறப்படும் நிலையில், தாங்கள்தான் இலங்கைக்கு ‘ பெரிய அண்ணன்’ என்ற கோட்பாட்டை உணர்த்தவிட்டு செய்வதற்காகவே குறுகிய விஜயத்தை மோடி மேற்கொள்கின்றார் என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கையுடன் இந்தியா கைகோர்த்து செயற்படும் என்ற தகவலையும் இப்பயணத்தின் ஊடாக மோடி வெளிப்படுத்துவார் எனவும் அறியமுடிகின்றது.

அதேவேளை, பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் மோடி கூட்டாக சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறுகிய கால பயணமென்பதால் தனிப்பட்ட ரீதியிலான கலந்துரையாடல்கள் இடம்பெறாது என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன

முதலாம் இணைப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி இந்த விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்கப்படுகிறது.

இரண்டாவது தடவையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள நரேந்திர மோடி, முதலாவது வெளிநாட்டு விஜயமாக மாலைதீவு அல்லது இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் இந்திய பிரதமர் மாலைதீவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடி மாலைதீவு நாடாளுமன்றில் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு தங்களது ஆதரவினை வெளியிடும் நோக்கில் குறுகிய விஜயமொன்றை பிரதமர் மோடி மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Offers