கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று காலை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு, எதிர்கால அபிவிருத்திகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விடயங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பிலும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் சட்டதிட்டங்களையும் பாரிய தாக்குதலையும் நடாத்தி விட்டு நாசகாரவேலைகளை பார்த்தவர்களை ஒரு போதும் எம்மால் எமது மார்க்கத்தால் ஏற்றுக் கொள்ளமுடியாது.

கடந்த நல்லாட்சி அரசின் 52 இருண்ட யுகத்தில் தாங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அதனை சிறுபான்மை சமூகம் சார்பிலும் கட்சியின் தலைமை என்ற வகையிலும்அரசாங்கத்தை பாதுகாத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் .
முஸ்லிம் சமூகத்தை தப்புக் கணக்கு போட்டு அரசியல் தலைமைகளையும் வங்குரோத்துஅரசியல்வாதிகளாக பொதுபலசேனா, ராவண அமைப்புக்கள் செயற்படுவது இனக்குரோதங்களைவளர்ப்பதற்கு சமனாகுகிறது.

எமது சமூகம் உள்ளிட்ட ஏனைய சமூகமும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நிரந்தரசமாதானத்தையும் விரும்புபவர்கள் இதை விடுத்து அரச திணைக்கள அதிகாரிகள்அபிவிருத்திகளுக்கு இனக்குரோத வகையில் செயற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளவேண்டாம் என இதனை ஒரு அரசியல் தலைமை என்ற வகையில் பணிவாக இச் சபையில்கூறிக்கொள்ள விரும்புகிறேன் .

கிண்ணியாவில் ஒரு இலட்சத்திக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள் இங்கு ஐஎஸ் ஐஎஸ் என்கிற பயங்கரவாதிகளோ அமைப்புக்களோ இல்லை என்பதைமுப்படைகளுக்கு தெளிவாக எடுத்துக்கூறியிருக்கிறோம் ஒரு போதும் அவ்வாறானநிகழ்ச்சிகளுக்கு துணை போகவோ போராட்டங்களை முன்னெடுக்கவோ இடமளிக்க மாட்டோம்.

எனவேதான் அபிவிருத்திப் பணிகளை நடை முறைப்படுத்துவதன் ஊடாக திருகோணமலைமாவட்டம் மட்டுமல்ல நாட்டின் அந்நிய செலவாணிக்கும் பாரிய பங்குகளை வழங்கமுடியும் துறை முக அபிவிருத்தி இரு வருட துரிதகதியிலான அபிவிருத்திமுன்னெடுப்புக்கள் ஊடாக நடை முறையாக்கப்படவுள்ளது.

இது போன்ற கிண்ணியா உப்பாறு பகுதியில் நைடா தொழில் பயிற்சி நிலையத்தை உருவாக்க 500 மில்லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது இது போன்று பல்கலைக்கழக கல்லூரி உருவாக்கம் மற்றும் இதனால்3000 இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சிகள் அழிக்கப்பட்டு வேலைவாய்ப்பினையும் அங்கு உருவாக்க முடியும்.

கடந்த கால யுத்த வடுக்களை மறந்தும் ஒரு சமூகத்தின் தலைமையை தாக்க முற்பட்டும்சிலர் பொய் பிரச்சாரங்களை செய்கின்றார்கள் இதில் சில ஊடகங்கள் ஊடக தர்மங்களைமறந்து செயல்படுவது இனரீதியான வன்முறைகளை தூண்டச் செய்கிறது இதனை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப், கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.சனூஸ், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள், அரச உயரதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers