மாவட்ட செயலகத்திலிருந்து பின் வழியாக வெளியேறினார் அஸாத் சாலி

Report Print Ajith Ajith in அரசியல்

பிக்குகளின் கடும் எதிர்ப்பால் களுத்துறை மாவட்ட செயலகத்திலிருந்து பின் வழியாக வெளியேற வேண்டிய நிலை மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு நேற்று ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் களுத்துறை மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலியும் கலந்து கொண்டார். அவருக்கு இணைத்தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.

இதனால் கொதித்தெழுந்த மஹிந்த அணி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். அடிப்படைவாதி உள்ளே இருப்பதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில் செயலகத்துக்கு முன்னால் அணி திரண்ட பௌத்த பிக்குகள், அஸாத் சாலிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இவ்வாறு போராட்டம் உக்கிரமடைந்ததால், மாவட்ட செயலகத்திலிருந்து பின்வழியாக வெளியேற வேண்டிய நிலை ஆளுநருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் வெளியேறும்போது அங்குதிரண்டிருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியுள்ளனர்.

Latest Offers