மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடினார் மைத்திரி!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவுக்காக புதுடெல்லி சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை ஹைதராபாத் இல்லத்தில் இருவருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜுன் மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers