ரிஷாட்டை நாட்டிலிருந்தே விரட்டியடியுங்கள்’ ! தென்னிலங்கை அமைச்சர் வலியுறுத்து

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நாட்டிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி வலியுறுத்தினார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றின் பின்னர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்மீது கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றேன். அந்த எதிர்ப்பை உரிய வகையில் வெளிப்படுத்துவதற்காக காத்திருக்கின்றேன்.

ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையென உறுதிப்படுத்தப்படுமானால் அவரை உடனடியாக தூக்கிலிடவேண்டும். மரணதண்டனையை நிறைவேற்றுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது எதிர்வரும் 18, 19 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. கட்சி எந்த முடிவை எடுத்தாலும், மனசாட்சியின் பிரகாரமே நான் செயற்படுவேன். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.’’ என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Latest Offers