குற்றவாளிகள் சுதந்திரமாக திரியும் போது யாழ். மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஏன்? நாமல் டுவிட்டர் சாடல்

Report Print Vethu Vethu in அரசியல்

குற்றவாளிகள் வெளியில் சுற்றித் திரியும் போது பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விடுதலை புலிகள் தலைவரின் புகைப்படத்தை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

எனினும் உண்மையில் வெடி பொருட்களை வைத்திருந்த அரசாங்க அமைச்சரின் ஊடகச் செயலாளர் சுதந்திரமாக இருக்கின்றார்.

நாளாந்தம் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய்யான குற்றச்சாட்டில் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது கைது செய்யப்படுகின்றனர்.

எனினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் அமைச்சர் ரிஷாட் பதியூதின் மற்றும் ஆளுநர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதேவேளை, அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Latest Offers