இரண்டாவது முறையும் களமிறங்குவாரா மைத்திரி?

Report Print Ajith Ajith in அரசியல்

“டிசம்பர் 07ம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்ப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தான் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார் என ‘ரொய்ட்டர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

“ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து அவசரப்பட்டு தீர்மானம் எடுக்கவேண்டிய அவசியமில்லை.’’ என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார்’’ என அறிவிப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், நாட்டின் நலனைக்கருதி, மக்களின் கோரிக்கையின் பிரகாரம் இரண்டாவது முறையும் ஜனாதிபதி போட்டியிடலாம் என சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.

Latest Offers