இலங்கை தற்கொலை தாக்குதலின் பின்னணியில் ஈரான்!!!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுதாக்குலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்ட பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அண்மைய தீவிரவாத தாக்குதல் குறித்து தென்னிலங்கை தமிழ் அரசியல் வாதிகள் என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள்.

மாகாண கல்வி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தொன்டமானின் மகன் ஆகியோர் என்னிடம் பேசினர்.

இதன்படி, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உள்ளுர் ஷியா முஸ்லிம்களுக்கு ஈரானுடன் உள்ள செல்வாக்கே காரணம் என அவர்கள் விவரித்ததாக” சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து மற்றுமொரு டுவிட்டர் பதிவை இட்டுள்ள அவர், “இலங்கை தாக்குதல் ஷியா பிரிவினரால் நடத்தப்பட்டது என நான் தவறாக கூறிவிட்டேன். அது உண்மையில்லை.

இந்த தாக்குதல் வசாபி சன்னி பிரிவினரால் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ஈரான் உதவியுடன் ஷியா கல்வி நிறுவனங்களுக்கு நிதியளிக்கப்படுகிறது.

இந்த கல்வி நிறுவனம் மூலம் மத மாற்றம் செய்யப்படுகிறது” என சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers