மோடியின் இலங்கை விஜயத்தை உறுதி செய்தார் மைத்திரி!

Report Print Murali Murali in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி செய்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாகவும் நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பிற்கு பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி செய்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இந்திய பிரதமர் மோடி இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது வருகையை பெருமையாக கருதுகின்றோம். மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

உலகம் முழுவதிலும் பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில் தலை தூக்கியுள்ளது. சில நாடுகளில் உள்நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர்.

உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்” என கூறியுள்ளார்.

Latest Offers