ரிஷாட் பதியுதீன் உடன் பதவி துறக்க வேண்டும்! மஹிந்த ராஜபக்ச

Report Print Ajith Ajith in அரசியல்

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உடன் பதவி துறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அத்துரலிய ரதன தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துரலிய ரதன தேரரால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்னவென சிங்கள நாளிதழொன்று வினவியபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு 2015ஆம் ஆண்டில் முன்னின்று செயற்பட்டவர்களில் மிக முக்கியமானவர் தான் அத்துரலிர ரதன தேரர்.

எனவே, அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்துவதற்கான தார்மீக உரிமை அவருக்கு இருக்கின்றது.

அதேபோல் தேரரின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும் கூட என்று சுட்டிக்காட்டியுள்ளார்.