பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

இன்று முற்பகலில் இந்த சந்திப்பு நடைபெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.