ஜனாதிபதியிடம் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு ஆளுநர்களையும் பதவி நீக்குமாறு சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களால் சில தடவைகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆளுநர்களை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாகவும், இதனால் அவர்களை பதவி நீக்குவதே உசிதமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.