பதவி துறக்கின்றனர் முஸ்லிம் அமைச்சர்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

அமைச்சர் ரிசாட் பதியூதீன் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பலர் தமது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இவ்வாறு பதவி விலக தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பௌசியின் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின்போது குறித்த தீர்மானத்தினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.