சிறீதரன் எம்.பியை சந்தித்தார் கனேடிய உயர்ஸ்தானிகர்

Report Print Arivakam in அரசியல்

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போத, சமகாலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு, ஏப்ரல் 21க்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினார்.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த குருகுலராஜாவும் கலந்து கொண்டார்.

கனேடிய உயர்ஸ்தானிகர் முன்னாள் கல்வி அமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.