அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வின் இராஜினாமா தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியானது

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இன்று இராஜினாமா செய்தனர்.

ஆளுநர்களான ஹில்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று தங்கள் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்திருந்தனர்.

இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அவர்கள் இருவரின் இராஜினாமா தொடர்பான விசேட வர்த்தமானி தற்போது வெளியாகியுள்ளது.